வணக்கம்! கவிஞனின் கவிமழை!! வழியே உங்களை வரவேற்கிறேன்!கவிஞனின் கவிமழை வந்து பார்த்து ஊக்குவிப்பதற்கு என் நன்றி! உங்களால் தான் நான் இங்கே...! py. செல்வம்.நா,(selvam.N) உங்களுடைய கவிதைகளை அனுப்ப - singam.0001@gmail.com

Monday, April 26, 2010

அன்புக்கு நேரமில்லை !!!!!

ஆரவாரம் மிகுந்த வாழ்க்கை
அந்தரத்தில் தொங்கும் வாழ்க்கை
அமைதியற்ற வாழ்க்கை -அதில்
அன்புக்கு கிடைக்கவில்லை நேரம்
சொற்கள் ஆயிரம் அதை
கேட்பவர் இங்கு யாருமில்லை
வேதனைகள் ஆயிரம், ஆயிரம் -அதை
விளங்குபவர்கள் யாருமில்லை
வரம்புமீறிய வருமானம்-அங்கே
வரவரக்குரைகின்றது மனிதநேயம்
தேவைகள் தினம் தினம் அதிகம்
தேடல்களும் மிதமிஞ்சி செல்கிறது
வாழ்க்கையில் பொறுமைக்கு நேரமில்லை-அதனால்
வயிற்றைக் குடைகின்றது வறுமையின் கொடுமை
வெறுமை நிலையென்றால் அங்கே வேதனைகள்தான்
அதுதான் மனிதனின் ஆரவாரம் நிறைந்த வாழ்க்கை !!!!!!!!



வே.சுதன்
பிரான்ஸ்

No comments:

Post a Comment