இதய வலி
கண்ணோடு கண் வைத்து
கவிதையின் கரம் பற்றி
உயிரோடு உறவாடி
உயிராக இருந்தவளே!
புதினங்கள் பல பேசி
புதிதாக எனக்கு
தேவதை போல் வந்தவளே
இன்று தேவதாஸ் ஆக்கி சென்றவளே
எப்படி இருக்கிறாய் என்னவளே
காலங்கள் பல கழிந்தன
ஆனாலும்!
என்னவளே உன் நினைவு மட்டும்
இன்னும் அப்படியே
உள்ளதடி
சில நொடிகளில்
நீ பேசி விட்டு சென்றது
இன்னும் என் நினைவலைகளில்
அப்படியே
ஒன்று மட்டும் சொல்கிறேன்
என்றேனும் என் நினைவு
வரும் எனின்
ஒரும் முறை எனும்
புன்னகை!!!!!!!!!!!!!!
அந்த நிமிடத்துக்காக
காலம் முழுதும்
காத்திருப்பேனடி!!
v.jeganathan
sri lanka
Monday, April 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment