வணக்கம்! கவிஞனின் கவிமழை!! வழியே உங்களை வரவேற்கிறேன்!கவிஞனின் கவிமழை வந்து பார்த்து ஊக்குவிப்பதற்கு என் நன்றி! உங்களால் தான் நான் இங்கே...! py. செல்வம்.நா,(selvam.N) உங்களுடைய கவிதைகளை அனுப்ப - singam.0001@gmail.com

Monday, April 26, 2010

காதல் வலி தந்தவனே..

மனதினில் என் மனதினில் உந்தன் முகம் வந்து
ஏனோ ஏனோ என்னை கொல்கிறது..

காதலும் நீயேன வாழ்வும் நீயென
வாழ்க்கையை தொலைத்தேன் வாலிப வயதினிலே...
உறவுகள் இருந்தும் என் உயிர் நீயேன
உயில் எழுதி தரவா உயிர் ஓவியமே
உறங்கா உன் நினைவுகள் உறக்கத்திலும் உளரலாய்
காற்றினில் கலக்குதடா காதல் வலி தந்தவனே..

என் கண்ணை பாரடா
என் இதயத்தின் வலிகள் இரு விழிகளிலும் தெரியுமடா
இதயத்தில் பூவாய் மலர்ந்தவனே..
ஏனடா என் இதயத்தை புயலடித்த தேசமாய் மாற்றினாய்..

காதலில் என்னோடு சேர்ந்து வாழ்ந்தவனே..
கண்ணீரையும் கனவுகளையும் காதல் பரிசாக தந்து விட்டு போனாயேயடா
காதல் வலி தந்தவனே..

காதல் என்னைவிட்டு பிரியவில்லை நீமட்டும் ஏனடா
என் காதலை விட்டு பிரிந்தாய்..
என் காதலும் எங்கே என் கவிதையும் எங்கே
சொல்லிவிட்டு போ இல்லை என்னை கொன்று விட்டு போ..



பாமினி
சுவிஸ்
.................................................................................................................................................................................................................

பெண்மையைப் போற்றுவோம்

மங்கையராய் பிறப்பது
மாதவம
மகத்துவமாய் வாழும் போது
மானிடப் பிறப்பு புனிதமடையும்

மங்கையரின் தியாகத்தை
மனிதன் பெற்ற தாய் மூலம் அறிந்திடுவார்
மறந்திருந்தால்
மங்கிவிடும்
மனிதவாழ்வு

மங்கையருக்குள் இருக்கும்
மனதையும் புரிந்து கொண்டால்
மானிடனே பெண்மையை வாழவைப்பாய்
சமஉரிமை தேவையில்லை
சாபங்களிலிருந்து பெண் நீங்கி விடுவாள்

தாரமாய் வந்திடுவாள்
தன்னலமாய் வாழ்ந்திடாள்
மென்மையாய் பெண்ணிருந்து கொண்டால்
பொன்னகையும் தேவையில்லை - அழகே
பெண்ணே உனக்கு



தனுஷா சந்திரகுமாரன்
யாழ்ப்பாணம்
...................................................................................................................................................................................

காதல் சின்னம்

கருத்தொருமித்த காதல்
கருவறைக்குள் கண்ணிளந்தால்
உலகத்தின் காதல்
ஒரு மணித்துளிக்குள்
ஜனனித்து
மரணித்தும் விடும்

இதையத்திற்கு இதையம்
கட்டியதல்ல தாச்மகால்
நான்கு மனையாளிடம்
பாகம்கொண்ட இதையம்
ஒருத்திக்காக கட்டிய
பளிங்கிச் சின்னமே தாச்மகால்
இது சந்நிதி அல்ல
ஊமை விழிகளின்
முற்றுகைச் சின்னம்

காதல் கருத்தொருமித்தால்
கையளவு இதையத்திற்குள்
கடலே அடக்கம்
காதலரே
காலத்தால் அழியாத காதல் சின்னம் கலங்கரை ஒளியே
இதற்கு சின்னங்களோ
சிலுவைகளோ
வகுப்பறை பாடங்களோ
ஒளி கொடுப்பதில்லை.


வல்வை சுஜேன்.

மண் மீட்க வந்த மாதவங்கள்!!!!!

மாரி மழையாகி நீர் தெளித்து ஆடி
மண் குளிரச்செய்த முகில்கள்
மாதவங்கள் செய்த போதெமது பூமி
மடியில் உருவான எங்கள் உன்னதங்கள்
போரில் விளையாடும்போது உடல் வீழ்ந்த போதும்
உயிராக இருக்கும் சிலைகள் அவர்கள்
பூங்குயில்கள் பாடும் ஈழமதை மீட்க
போய்எரிந்து போன எங்கள் புலிகள்
மாலை ஆறுமணி ஆகும் பொழுதாக
மாரிமழை கொஞ்சம் ஓயும்
மாலை,மலர் சாத்தி தீப ஒளிகாட்டும்
வேளைதனில் உறவுகள் விழிதனிலே ஆறுபாயும்
சாதி,மதம் என்று வேறுபடல் இன்றி
தேவநிலை கொண்டு பாடும்
வாரி எடுத்தும்மை வாசல்தனில் வைத்து
வாசமலர் தூவும் பொழுதினில்
வந்தெமது கண்ணில் நின்று தெரிகின்றவாறு
வரவேண்டும் எம் செல்வங்கள் அருகில்
தேரில் எழுந்தெங்கள் தீப ஒளிகாண
தேடிவரவேண்டும் உறவு
தேசமெல்லாம் நின்று குளிர் ஒளி வீசும் காற்றில்
சேர்ந்து வரவேண்டும் எமது தெய்வங்கள்


வே.சுதன்.
பிரான்ஸ்.
........................................................................................

அம்மா

கருவினில் தாங்கி
உருவாகி உயிர் பெற
உழைத்தவள் அம்மா.
உயிர் எழுத்தின்
உண்மைப் பொருள் அம்மா.

பயிராக்கி எம்மை பத்திரமாய்
காத்திட்ட போதிலும் பலன்
எதிர்பாராப் பாத்திரம் அம்மா.
இருப்புக்குள் விருப்பை இனிதுறச்
செய்பவள் அம்மா.

இல்லத்தின் அழகிய கோலம்
அம்மா.
பசி கிடந்து எம்
பசி போக்கும் நல்லவள் அம்மா.
வாட்டத்தின் நோட்டம் அறிந்து
வைத்தியம் செய்யும் வல்லவள் அம்மா.

அன்புக்கு அட்சய பாத்திரம்
அம்மா.
வலிகளை வாங்கி தனக்குள்
பலியாக்கும் பக்குவம்
நிறைந்தவள் அம்மா.
நாட்டிற்கு நல்ல பிரதிநிதியை
வழங்குபவள் அம்மா.

ஊணை உருக்கி
உயிரைக் கருக்கி
தன்னைத் தாரை
வார்ப்பவள் அம்மா.


ரி.தயாநிதி

காதலென்னும் விரகநெருப்பு

காதலென்னும் விரகநெருப்பு
மனமென்னும் எரிமலைக்குள்
சித்திரப்பூ பூத்துவிட்டால்
சந்தோசமழை சிந்திச்சிந்தி
நினைவலைகளோ கனவுகளில் நீராடும்

வாலிபம் ஏங்கித் தவிக்கும்
பருவகாலச் சிந்து அதுவன்றோ
இதயவாசல்களைத் திறந்து
காதல் வானவில்லொன்று
கனவுகளாலும் கண்ணீராலும்;
வரையப்படும்;

இரவும் பகலும்
சுரங்களைச் சுரக்கும்
காதல் வீணையது

விழித்திருந்தால் கூட
கனவுகள் அங்கே சங்கமமாகும்
ஒருவரை ஒருவர் காணத்துடித்து
பலநூறு நிமிடங்கள்
ஒற்றைக் காலில் தவமிருக்கலாம்

ஏக்கத்தில் சுவாசக்காற்றும்
அப்போது ராகமாகும்
நெருப்பின் சுடர்கள் எண்ணையின்றி
நெஞ்சிற்குள் எரியும்

கோரிக்கையில்லாததோர்
உண்ணாநோன்பு உருவாகும்
ஒருவரையொருவர்
அணைத்திடத் துடித்திட்டால்
கூச்சங்கள் விம்மி நிற்க
கரங்கள் நான்கும் தூரிகையாகும்

குளிர்ந்து இருக்கும் இரத்த நாளங்கள்
வெப்பப் புரட்சிக்குத் தயாராகும்
உதடுகள் இரண்டும்
உரசத் துடிக்கும்

அந்த
பருவ ஏக்கம் வந்த நெஞ்சிற்குள்
அற்றை நாள் இருவருக்கும் விடியாது
சூரியன் உதிப்பதும் தெரியாது
காதலினால் இதுவோர் விரகநெருப்பு

சுவிஸ்சிலிருந்து விக்கி நவரட்ணம்

மழை வானம்...

மழை
வானம் கறுக்கட்டும் வாட்டம் தெளியட்டும்
மேகம் மூட்டி மோதி இடி மின்னல் தோன்றட்டும்

பஞ்சம் பசி என்று பட்டினியாய் இருக்காமல்
கொஞ்சம் மழை வந்து கோடி உயிர் வாழட்டும்

பாடும் பறவையினம் கூடு வந்து சேரட்டும்
நாடும் நல்லவரும் பாடி மனம் மகிழட்டும்

பேடும் கடுவனுடன் பேரின்பம் காணட்டும்
காடும் கழனிகளும் களிப்போடு திகழட்டும்

கேடும் இல்லாமல் கெடுப்பாரும் இல்லாமல்
ஈடு இணை இல்லா அந்த இன்ப மழை பொழியட்டும்

இந்துஜா
சுவிஸ்