பேதையும்,போதையும்.
வாதையும், வலியும்
பேதையும், போதையும்
யாருக்குப் புரியும்
இரண்டுமே ஒன்றென்று.
ஊருக்குள் உத்தமனாய், நற்
பேருக்குப் பாத்திரமாய்,
பெற்றவர்க்கு நற் புத்திரனாய்
கோலோச்சிய காலம்
பாழாய்ப் போனதே!
துள்ளித் திரிந்த காலம்
பள்ளிப் படிப்பே கதியாகி
வெள்ளிக் கிழமை விரதனாய்
பக்தனாய் பட்டை அணிந்தவனாய்
வெள்ளைச் சீருடையில்
பவனி வந்த நாட்களவை.
எல்லாமே இல்லாமல்
போன இன் நாளை
எங்கனம் உரைப்பேன்.?
கண் கெட்ட பின்
சூரிய நமஸ்க் காரமா?
புண் பட்டு போனதால்…
தன் நலம் மறந்து
புகட்ட வந்தேன் பாடம்.;
புடித்தறிவாய் மானிடா. !
சிந்தனைச் சிறகறுத்து
குறுகிய மனப் பரப்பில்
பெருகியது அவள் நினைப்பு.
யாரந்த தேவதை?
ஏன் இந்த பெரும் வதை.
சிங்காரி சிரிப்பும்,
சீரான பேச்சும்,
கூரான பார்வையும்,
நேரான நடையும். அவளை
வாராயன் தோழி வாராய்
என வரவேற்கச் செய்தது.
உள்ளத்தில் மகிழ்வு
பெரு வெள்ளமாய்ப் பாய
கள்ளமில்லா வாழ்வு
கரும்பாய் இனித்தது.
பார்வை என் தேடலை
போர்வைக்குள் மூடியது.
படிப்பும் போ,
துடிப்பும் போ.
கடிவாளம் அறுந்து
தடி மாடு தறுதலையானது.
தாயை மறந்தேன்.
தார்மீகக் கடன் மறந்தேன்.
ஊரை மறந்தேன்.
உலகை மறந்தேன்.
போதை தலைக்கேற
பேதையையும் மறந்தேன்.
இத்தனையும் நான் மறக்க
காரணம் அவள் என்னை
மறந்ததே!மறந்ததே!
ரி.தயாநிதி
Monday, April 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment